உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் ; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

0 2122
உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும்

உத்தரப் பிரதேசத்தில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக முந்நூறு தொகுதிகளுக்குமேல் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜலான் என்னுமிடத்தில் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், சமாஜ்வாதிக் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் சாதிக்கட்சிகள் என விமர்சனம் செய்தார்.  முன்னதாகக் காஸ்கஞ்ச் என்னுமிடத்தில் பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு வருமுன் பெண்பிள்ளைகளைப் பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பப் பெற்றோர் அஞ்சியதாகத் தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த நாலரை ஆண்டுகளில் மாநிலத்தை விட்டே ரவுடிகள் ஓடிவிட்டதாக, அமித் ஷா குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments