சிறுநீரக பாதிப்பால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.. மகன் இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்து தாயும் தற்கொலை

0 4436

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உடல்நல பாதிப்பால் மனமுடைந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மகன் இறந்த துக்கம் தாளாமல் தாயும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரகுப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற அந்த இளைஞருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. அதற்காக அவர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

பிரேம்குமாரின் தாய் கஸ்தூரியின் சிறுநீரகங்களில் ஒன்றை எடுத்து அவருக்குப் பொருத்தலாம் என்று முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் திடீரென பிரேம்குமார் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தடைபட்டுள்ளது. அதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட பிரேம்குமார், சனிக்கிழமை இரவு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மகன் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்த தாய் கஸ்தூரி, பிரேம்குமாரின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments