வேலூர் காட்பாடியில் மூன்றாவது நாளாக 22 ரயில்களின் சேவை ரத்து.. மேம்பாலத்தின் விரிசலை சரிசெய்யும் பணி தீவிரம்.!

0 15390

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணி நடந்து வரும் நிலையில், அவ்வழியாக செல்லும் ரயில்களின் சேவை மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

முகுந்தராயபுரம் - திருவலம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொன்னையாற்றின் குறுக்கே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் பில்லர் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

பால சீரமைப்பு பணிகள் இன்றுடன் முடிவடையும் எனக் கூறப்படும் நிலையில், இன்று மாலை முதலில் சோதனை ஓட்டமாக சரக்கு ரயில் அந்த வழித்தடத்தில் இயக்கி பார்க்கப்படும் எனவும், அதன் பின்னர், நிலைமையை பொருத்து பயணிகள் ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்தோடு, பாலத்தை கடக்கும் ரயில்கள் வேகத்தை குறைத்து மெதுவாகவே செல்லும் நிலைமை இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments