தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

0 2233

நிறவெறிக்கு எதிராகப் போராடிய தென்னாப்பிரிக்கப் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு இன்று காலமானார்.

அவருக்கு வயது 90. இது குறித்து தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் தார்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் டுட்டு எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது, நீண்டகாலம் போராடி, நாட்டிற்கு விடுதலை பெற்றுத்தந்த சிறந்த ஒருவருக்கு பிரியாவிடை அளிக்கும் தருணம் என்றும் ராமபோசா கூறியுள்ளார். நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்றபோது வானவில் தேசம் என்ற சொல்லாடலை உருவாக்கி பிரபலப்படுத்தியவர் டுட்டு.

வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து அமைதி வழியில் போராடியதால், 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டெஸ்மண்ட் டுட்டுவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெஸ்மண்ட் டுட்டு மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உலக மக்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் டுட்டு என புகழாரம் சூட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments