சென்னை புதுநகர் பகுதியில் தண்டவாளத்தில் பழுது.. பயணிகள் ரயிலை மறித்து போராட்டம்.!
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் ரயில்நிலையம் அருகே, முதல் நடைமேடை தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கும்மிடிபூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவை ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் மூன்றாவது நடை மேடைக்கு வந்த மின்சார ரயிலை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
மாற்று பாதையில் ரயிலை இயக்குவதாக ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பயணிகள் கலைந்து சென்றனர். இதன் பின்னர் ஒன்றாம் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில், மூன்றாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டு எண்ணூர் வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டது.
இதன் பின்னர் ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Comments