கொலை வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர்.. ஜாமீன் ரத்தானது தெரியாமல் விடுதலை செய்த சிறைத்துறை அதிகாரிகள்

0 1883

திருச்சியில் கொலை வழக்கில் ஜாமீன் ரத்தானது தெரியாமல் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அழகுமணி என்ற அந்த நபருக்கு கடந்த 3ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. அவன் வெளியே வருவதற்குள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் 3 மாதங்களில் அந்த ஜாமீன் ரத்தானது.

இந்நிலையில் தன்னை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என அழகுமணி நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவு சிறைத்துறைக்கு அனுப்பப்பட்டது. அந்த உத்தரவில் அழகுமணிக்குப் பிடியாணை இருப்பதை சரியாகப் படிக்காமல் சிறைத்துறை அதிகாரிகள் கடந்த 18ஆம் தேதி அவனை சிறையிலிருந்து வெளியே அனுப்பி விட்டனர்.

கொலை வழக்கில் நாளை அழகுமணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலையில், அவன் தலைமறைவாக உள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி செந்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments