காங்கோவில் மதுபான விடுதியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பேர் பலி.!

0 2628

காங்கோ நாட்டில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

பலர் படுகாயமடைந்தனர். வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள பெனி நகரில் உள்ள மதுபான விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு நடுவே, உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7 மணியளவில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.

சம்பவ இடத்தில் பதற்றத்தை தணிக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சுற்றுப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நகர மேயர் முதேபா கஷலே நர்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதுடன் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  h

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments