முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 மோசடி புகார்கள்

0 3322

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, மேலும் பல மோசடி புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சிவகாசியில் பி.ஆர்.ஓ. வேலை வாங்கித் தருவதாக கூறி அதிமுக நிர்வாகிகள் மூலம் 17லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதாக ஒரு புகாரும், மதுரையில் மாநகராட்சியில் அலுவலக உதவியளர் வேலை வாங்கித் தருவதாக ஏழு லட்சம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக ஒரு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக ஏழரை லட்சம் பணம் வாங்கிவிட்டு நம்பிக்கை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கு வந்துள்ள மேற்குறிப்பிட்ட புகார்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments