ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 136 படுக்கைகளுடன் கூடிய ஒமைக்ரான் சிகிச்சை மையம்

0 2126

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 136 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால், முன்னெச்சரிக்கையாக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள சிகிச்சை வசதிகள் குறித்தும் முதலமைச்சர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், அங்கு பி.எம்.கேர்ஸ் நிதியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.வளாகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா வார் ரூமை பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு, ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றை பார்வையிட்டார்.

கொரோனா வார் ரூம் என்பது தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, மருந்துகள் இருப்பு போன்ற தகவல்களை 104 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும் பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments