இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 445ஐ கடந்தது

0 2511

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 445ஐ தாண்டியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும், கொரோனா பாதிப்புக்கு மேலும் 162 பேர் உயிரிழந்துள்ளாதாகவும், இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 3 கோடியே 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 141 கோடியை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments