பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், உத்தரப் பிரதேசத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் ரூ. 5 இலட்சம் கோடி முதலீடு -அமைச்சர் நிதின் கட்கரி

0 4859

உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஐந்து இலட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பிரதாப்கரில் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் அமெரிக்காவில் உள்ளதைப்போன்ற தரமான சாலைகளை உத்தரப் பிரதேசத்தில் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் அனைத்து ஊர்களையும் சாலைகளால் இணைக்க வேண்டும் என்பது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு என்றும் நிதின் கட்காரி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments