கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்

0 3360

கர்நாடக மாநிலத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கூட்டங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் 300 பேர் வரை மட்டுமே பங்கேற்கவும், வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவால் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments