மது போதையில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்.. பதற்றத்தை தவிர்க்க பாதுகாப்புப் பணியில் போலீசார்.!

0 1722

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரு தரப்பு மீனவர்கள் மோதிக்கொண்டதில் 5 பேர் காயமடைந்தனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செருதூர் மீனவர்களுக்கும், வானகிரி பகுதி மீனவர்களுக்குமிடையே மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருதரப்பும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments