தலைநகர் டெல்லியில் மேலும் மோசமடைந்தது காற்றின் தரம்.!

0 1951

தலைநகர் டெல்லியில் இன்று காலை காற்றின் தரம் மேலும் மோசமடைந்து, கடுமையான நிலையை அடைந்துவிட்டதாக காற்றின் தரத்தை ஆராயும் அமைப்பான சபார் இந்தியா தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 430ஆக உள்ளது.

நேற்று காலை மிகவும் மோசமான நிலையில் இருந்த தலைநகரின் காற்றின் தரம் இன்று கடுமையான நிலைக்கு உயர்ந்துள்ளது. தலைநகரில் பனிமூட்டத்துடன், காற்று மாசுவும் அதிகரித்திருப்பதால், வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்தனர்.

காற்றின் தரத்தை அளவிடும் அமைப்பின் அளவுகோலின்படி, காற்றின் தரக்குறியீடு 101 முதல் 200 வரை மிதமானது என்றும், 201 முதல் 300 வரை மோசம் என்றும், 301 முதல் 400 வரை மிகவும் மோசமானது என்றும் காற்றின் தரம் மதிப்பிடப்படுகிறது. 401 முதல் 500 வரை இருப்பின் அது கடுமையான நிலை என்று மதிப்பிடப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments