கடலூரில் கோழி தீவனத்திற்காக கடத்தப்பட்ட ரேஷன் அரிசி.. 5 பேரை கைது செய்த போலீசார்

0 1592

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, 24 டன் ரேஷன் அரிசி கடத்திய 5 பேரை கைது செய்த போலீசார், லாரி மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.

மாங்குளம் கிராமத்தில் இன்று அதிகாலை சிறுபாக்கம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர்.

மங்களூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி வேலூர் மாவட்டத்திற்கு கோழி தீவனத்திற்காக கடத்தப்பட்ட 23,440 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து, மங்களூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் மற்றும் சங்கரன் பாளையம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், புருஷோத்தமன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments