22 விவசாய அமைப்புகள் இணைந்து உருவாக்கிய அரசியல் இயக்கம்.. தேர்தலில் 117 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

0 2827

பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் தேதி ஜனவரி 5 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், 22 விவசாய சங்கங்கள் ஒன்று சேர்ந்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளன.

இந்த புதிய அரசியல் இயக்கம் வரும் சட்டமன்றத் தேர்தலில் 117 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர் டெல்லியில் வேளாண் சட்டங்களைத் திரும்ப் பெற மத்திய அரசை நிர்ப்பந்தித்து ஒருவருடத்துக்கும் மேலாக போராடி வெற்றி பெற்ற விவசாயிகள், மாநில அரசுக்கு எதிராகவும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் அரசியல் இயக்கத்தை உருவாக்கி தேர்தலிலும் போட்டியிட இருப்பதால் அரசியல் கட்சிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments