சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த செல்வகுமார் என்பவர் கைது.!

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த செல்வகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த தமிழ் செல்வன், கடந்த மாதம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மனுவில், முன்னாள் முதலமைச்சரின் முன்னாள் உதவியாளர் மணி மற்றும் அவரது நண்பர் சேலத்தை சேர்ந்த செல்வகுமார் தன்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 17 லட்சம் பெற்று, பின்னர் 4 லட்சத்தை திருப்பி கொடுத்ததாகவும், மீதி பணத்தை தராமல், மிரட்டியதாகவும் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் உதவியாளர் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்து வந்த செல்வகுமாரை போலீசார் தேடி வந்தனர்.
Comments