கோயம்புத்தூரில் கணவனை கொலை செய்த மனைவி மற்றும் ஆண் நண்பர் கைது.!

0 4975

கோயம்புத்தூர் அருகே கணவன் கொலை வழக்கில் மனைவி மற்றும் ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர்.

கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா- ரீனா தம்பதியினருக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி தனது கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, ராஜாவின் சகோதரிக்கு ரீனா தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ராஜா தற்கொலை செய்யவில்லை என்றும் கொலை செய்யப்பட்டு பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ரீனாவிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவருக்கும் குடும்ப உறவினரான சதீஷ் என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக முறையற்ற பழக்கம் இருந்து வந்துள்ளது தெரிய வந்தது. இதனை ராஜா கண்டித்ததால் இருவரும் சேர்ந்து கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments