ஒமைக்ரான் பாதிப்பில் சாதாரண ஜலதோஷ அறிகுறிகள் - ஆய்வாளர்கள்

0 2870

ஒமைக்ரான் தொற்று பாதிப்புகளில் வழக்கமான ஜலதோஷ அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் முந்தைய சார்ஸ் மற்றும் கோவிட் 2 வைரஸ்களை ஒப்பிட்ட அறிவியல் நிபுணர்கள் ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்து பிரிட்டனில் ஆய்வு மேற்கொண்டதில் சாதாரண ஜலதோஷத்தின் அறிகுறிகளை கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடல்வலி, வறண்ட தொண்டை போன்ற அறிகுறிகளுடன் ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக கோவிட் அடையாளமான காய்ச்சல், இருமல், சுவை இழப்பு ஆகிய அறிகுறிகளும் உள்ளன. இதில் ஜலதோஷம் பிடித்த பாதி பேருக்கு கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments