சிறந்த மாநில அரசுகளின் பட்டியலில் குஜராத் முதலிடம்..

0 8247

சிறந்த மாநில அரசுகளின் பட்டியலில் குஜராத் முதலிடம் பெற்றுள்ளது.

2021 ஆண்டில் சிறப்பாக செயல்படும் அரசுகள் குறித்த பட்டியல் வெளியானது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குஜராத்தில் 8 புள்ளி 9 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மகாராஷ்ட்ராவும் கோவாவும் சிறந்த அரசு நிர்வாகம் உள்ள மாநிலங்களாக இடம் பிடித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் 3 புள்ளி 7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று இந்தப் பட்டியலை வெளியிட்டார்.

சிறந்த அரசு நிர்வாகம் என்பது தொழில் வளர்ச்சி, வேளாண்மை, கல்வி, சுகாதாரம் , பொதுமக்களுக்கான உள் கட்டுமான வசதிகள், சமூக நலன், நீதி, மக்களின் பாதுகாப்பு ஆகிய அம்சங்களை உட்கொண்டதாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments