மும்பையில் ஒமைக்ரான் பீதியால், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மகாராஷ்டிர மாநகராட்சி தடை.!

0 1799

மும்பையில் ஒமைக்ரான் பீதியால், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மகாராஷ்டிர மாநகராட்சி தடை விதித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கொரோனா உருமாற்றத்துடன் ஒமைக்ரான் வடிவில் புதிய அவதாரம் எடுத்து பல மடங்கு வேகமாகப் பரவி வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களால் இந்த நோய் தொற்றின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மராட்டியத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் துபாயில் இருந்து வரும் மும்பை வாசிகள் தங்களை 7 நாட்கள் வீட்டு தனிமைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. அடுத்த உத்தரவு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments