ஒமைக்ரான் பரவலைத் தடுக்க 10 மாநிலங்களுக்கு மத்திய நிபுணர்க்குழுக்கள் வருகை.!

0 1370

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மருத்துவ நிபுணர்க் குழுவை தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, கேரளா ,மேற்குவங்கம் ,மீசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதில் தடுப்பூசி இயக்கம் மந்தமாக இருக்கும் சில மாநிலங்கள் மத்திய நிபுணர்க் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் அந்தந்த மாநிலங்களில் மூன்று அல்லது 5 நாட்களுக்குத் தங்கியிருந்து மாநில அரசு மேற்கொள்ளும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தந்து ஆலோசனைகள் வழங்கும். தினந்தோறும் இரவு 7 மணிக்கு அன்றைய சுகாதார நடவடிக்கைகள் குறித்து இக்குழுக்கள் மத்திய அரசுக்கு தனது அறிக்கையை தாக்கல் செய்யும்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments