தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 16-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்.!

0 1884

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 16-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

பல மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களிலும், சென்னையில் மட்டும் 1,600 இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. சனிக்கிழமைகளில் நடைபெற்று வந்த முகாம், கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் சனிக்கிழமை புத்தாண்டு என்பதால் அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முகாம் நடைபெறும் என்றும் அதன் பின்னர் வழக்கம் போல், வாரம் தோறும் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments