மல்யுத்த வீரர் சரமாரியாகச் சுட்டுக்கொலை ; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

0 2543
மல்யுத்த வீரர் சரமாரியாகச் சுட்டுக்கொலை ; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மகாராஷ்ட்ர மாநிலம் புனே அருகே காரில் வைத்து மல்யுத்த வீரரை நான்கு மர்மநபர்கள் சரமாரியாகச் சுட்டுக் கொன்றதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியில், புனே அருகிலுள்ள சகன் என்னுமிடத்தில் கராலே என்ற மல்யுத்த வீரர், தனது காரின் கதவைத் திறந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்கிறார்.

அவர் காரைக் கிளப்ப முயலும் போது, அங்கு வேகமாக வந்து நிற்கும் ஒரு காரில் இருந்து இறங்கிய ஒருவன், கராலேயை நோக்கி தன் கைத்துப்பாக்கியால் சுடுகிறான். அதே காரில் வந்த மேலும் மூன்று பேரும் சரமாரியாக மல்யுத்த வீரரை நோக்கிச் சுடுகின்றனர்.

பின்னர், அவர்கள் அனைவரும் தாங்கள் வந்த அதே காரில் ஏறி தப்பித்துச் சென்று விடுகின்றனர். சம்பவத்தை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மல்யுத்த வீரர் உயிரிழந்தார்.

குறைந்தது எட்டு முதல் பத்து ரவுண்டுகள் வரை சுடப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள காவல்துறையினர் கொலைக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments