ஆசிரியரின் பணிமாறுதலை ஏற்கமுடியாமல் அரசுப்பள்ளி மாணவர்கள் கண்ணீர்

0 2744
ஆசிரியரின் பணிமாறுதலை ஏற்கமுடியாமல் அரசுப்பள்ளி மாணவர்கள் கண்ணீர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் பணி மாறுதல் ஆகி செல்வதை அறிந்த மாணவர்கள் கதறி அழுதனர்.

கருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், உதவி ஆசிரியராக பணியாற்றி வரும் ரவிச்சந்திரனுக்கும், பள்ளி தலைமையாசிரியருக்கும் இடையே முரண்பாடு இருந்துவந்த நிலையில், பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்காக இருவரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து, சங்கட்டத்துடன் ரவிச்சந்திரன் தனது பணி மாறுதல் செய்தியை மாணவர்களிடம் தெரிவித்தபோது, பிரிய மனமில்லமால் அவரை ஆரத்தழுவிகொண்ட மாணவர்கள் கதறி அழுதுள்ளனர்.

இதையடுத்து, ஆசிரியர் சேதுராமன் பள்ளியை விட்டு செல்வதை அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர், அவர் பள்ளியில் பணியாற்றுவதால் தான் பிள்ளைகளை இங்கு படிக்கவைப்பதாக தற்போதைய தலைமையாசிரியரிடம் தெரிவித்த நிலையில், ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்வதால் தங்களது பிள்ளைகளையும் வேறு பள்ளிக்கு மாற்றப்போவதாக மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments