ஆசியாவிலேயே முதன்முறையாக கொரோனா பாதித்து 65 நாட்கள் எக்மோ உதவியுடன், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமலே மீண்ட சிறுவன்

0 3143

ஐதராபாத்தில் கொரோனா பாதித்து 65 நாட்கள் தொடர்ந்து எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சையில் இருந்த 12 வயது சிறுவன் முழுமையாக மீண்டுள்ளான்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த 12வயது சிறுவனான சவுரியாவிற்கு 4 மாதங்களுக்கு முன் கொரோனா நிலையில், அவரது நுரையீரல் தீவிரமாக தொற்றுக்குள்ளானதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து விமானம் மூலம் லக்னோவில் இருந்து ஐதராபாத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட சிறுவனுக்கு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து தெரிவித்த மருத்துவர்கள், எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, நுழையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமலே சிறுவன் முழுவதுமாக குணமடைந்ததாக குறிப்பிட்டனர்.

மேலும், ஆசியாவிலேயே சிறுவன் ஒருவன் நீண்ட நாட்கள் எக்மோ உதவியுடன் சிகிச்சையில் இருந்து முழுமையாக மீண்டது இதுவே முதன்முறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments