காவல்துறை தூய்மைப் பணியாளர்களின் ஊதிய விவகாரம்.. நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவு

0 1662

கல்வித்துறை தூய்மைப் பணியாளர்களுக்கு இணையாக, காவல்துறை தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது.

558 காவல்துறை தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக உள்துறை மற்றும் டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களில், சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், பிற துறை பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் கோர முடியாது எனவும், எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை எனவும், அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments