சிறுமி சாலையின் குறுக்கே திடீரென ஒடியதால் காவலரின் கண்முன்னே அவரது மகள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு

0 4539

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காவலரின் கண் முன்னே அவரது 9 வயது மகள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் காவலரான முருகன் என்பவர் திருச்செந்தூர் பைபாஸ் சாலையில் தனது மகள் மிருதுளா பார்கவி மற்றும் சக காவலர்களோடு நடைப்பயிற்சி சென்றுள்ளார்.

அப்போது, சிறுமி திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்ததில் அய்யப்ப பக்தர்களோடு வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார். மகள் குறுக்கே பாய்வதை தடுக்கச்சென்ற காவலரும் படுகாயமடைந்துள்ளார்.

விபத்துக்கு காரணமாக அமைந்த ஐயப்ப பக்தர்கள் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments