2 ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆவணம் செய்து வைக்க வேண்டும்.. தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

0 3053

வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதள பயன்பாட்டு விவரங்கள் ஆகியவற்றை 2 ஆண்டுகளுக்கு ஆவணம் செய்து வைக்குமாறு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வகையான வர்த்தக ஆவணங்கள், தொலைபேசி அழைப்பு தகவல்கள், ஐ.பி. தகவல்களை தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், 2 ஆண்டுகளுக்குப் பின் ஆவணப்படுத்தும் காலத்தை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பு பிறப்பிக்கபடாவிட்டால், நிறுவனங்கள் அந்த தகவல்களை அழித்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments