நண்பனை வாகனத்தின் மீது தள்ளிவிட்டு உயிரிழக்கச் செய்த 2 பேர் கைது

0 2347

தர்மபுரியில் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட நபரை அவரது நண்பர்களே வாகனத்தின் மீது தள்ளிவிட்டது, சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகி உள்ளது.

கடந்த 5-ம் தேதி தெல்லனாள்ளி என்ற இடத்தில் நண்பர்களுக்கிடையேயான தகராறில் மேகவேலு என்பவரை அவரது சக நண்பர்களான விஜயக்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மீது தள்ளிவிட்டுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மேகவேலு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் அவரது நண்பர்கள் போலீசாரிடம் உண்மையை மறைத்து மேகவேலு மீது வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தாக கூறி நாடகமாடியுள்ளனர்.

எனினும் நடந்த உண்மையை அப்பகுதியில் இருந்த சிசிடிவி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments