உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி ஜனவரி 5ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல்

0 3247
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி ஜனவரி 5ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல்

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை வரும் ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, வரும் 2022ஆம் ஆண்டு இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட்,மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.

தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராக உள்ள நிலையில், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பது தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதியை வரும் ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments