தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியினை உடனடியாக வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும், தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியினை உடனடியாக வழங்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட பின்பும் கூட, தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது, பாதிக்கப்பட்ட மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இனியும் காலதாமதம் செய்தால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வீதியில் இறங்கி போராடும் சூழ்நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments