கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 1788

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கருணையின் வடிவான இயேசு பிரான் பிறந்த நன்னாளை ஈகையும் அன்பும் பொங்க, சகோதரத்துவத்துடன் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நன்னாளில் அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கை மிளிர்ந்து, அன்பு தழைக்கட்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments