இரவு பகலாக முழுவீச்சில் 2வது நாளாக ரயில்வே பாலத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

0 2922

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, வெள்ளத்தில் சேதமடைந்த ரயில்வே பாலத்தை சரிபார்க்கும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

திருவலம் வழியே பாயும் பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தின் 38 மற்றும் 39-வது தூண்களில் விரிசல் ஏற்பட்டதால், கான்கிரிட் மூலம் பலப்படுத்தும் பணி, இரவு பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக, இவ்வழியாக இயக்கப்படும் 22 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, ரயில்வே பாலத்தில் இதுவரை 60 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் இரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் 2 வது நாளாக பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments