நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி - பிரேமலதா விஜயகாந்த்

0 4819

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  தேமுதிக தனித்துப் போட்டியிடுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை புனித தோமையார் மலை  தேவாலயத்தில் வழிபாடு நடத்திய பிரேமலதா விஜயகாந்த், 50 க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி பொட்டலங்களை வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தி உண்மையில்லை என்றார். மேலும் தேமுதிகவில் ' செயல் தலைவர் ' பொறுப்பை ஏற்படுத்துவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பொதுக்குழுவில் விஜயகாந்த் வெளியிடுவார் எனவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments