கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.!

0 2356

கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டபூர்வமான வாடகை ஒப்பந்தம் இன்றி, உரிய வாடகை செலுத்தாமல் கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள, காவல் நிலையத்தில் முறையாக புகார் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் மீது காவல்துறையில் விரைந்து புகார் அளிக்க வேண்டும் என்றும், மேலும், ஆக்கிரமிப்பு தொடர்பாக தனி நபர்கள் காவல்துறையினரிடம் அளிக்கும் புகாரின் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை வழங்கவும், கோவில் நிர்வாகிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் மீட்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments