உத்தரகாண்ட் அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜினாமா செய்வதாக கூறி அமைச்சர் ஒருவர் வெளிநடப்பு.!

உத்தரகாண்ட் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி அமைச்சர் ஒருவர் வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து உத்தரகாண்ட் அரசில் இணைந்த ஹரக் சிங் ராவத் தமது தொகுதியில் மருத்துவக் கல்லூரி அமைப்பதில் தாமதம் ஏற்படுத்துவதைக் கண்டித்து ராஜினாமா செய்வதாகக் கூறி அமைச்சரவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் அமைச்சர் ராஜினாமா செய்யவில்லை என்று அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் மறுப்பு வெளியிட்டுள்ளார். பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்போம் என்று மாநில பாஜக தலைவர் மதன் கவுசிக் கூறியுள்ளார்.
Comments