தள்ளுவண்டியில் இறந்து கிடந்த 4 வயதுச் சிறுவன் யார் ?.. 10 நாட்களாகக் கண்டறிய முடியாமல் போலீஸ் திணறல்.!

0 2319

கடந்த 15ஆம் தேதி , விழுப்புரம் நகர் பகுதியில் தள்ளுவண்டியில் இறந்து கிடந்த 4 வயது சிறுவன் யார் என்பதை கண்டறிய கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிறுவன் உணவின்றி இறந்திருக்ககூடும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், 2 மர்ம நபர்கள் அந்தச் சிறுவனை துணியால் மூடி விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து தூக்கி வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

அவர்கள் முகம் தெளிவாகத் தெரியாததால் அவர்களைத் தேடிப் பிடிப்பதில் போலிசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. உயிரிழந்த சிறுவன் 2 ஆண்டுகளுக்கு முன் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வழங்கப்பட்ட அங்கன்வாடி மைய சீருடை அணிந்திருந்ததால் அங்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments