உத்தரப்பிரதேசத்தில் கான்புர் பான் மசாலா வியாபாரியிடமிருந்து ரூ.177 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறையினர்.!

0 2543

உத்தரப் பிரதேச மாநிலம் கான்புரில் உள்ள தொழிலதிபர் வீட்டில் 177 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

பியூஸ் ஜெயின் என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலை, பெட்ரோல் நிலையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

பான்மசாலா பொருட்களை உரிய பில் இல்லாமல் போலியான பில்களை தயாரித்து, வருமானத்திற்கு அதிகமான பணம் சேர்த்ததும், மும்பையில் இருந்து வாசனை திரவியங்களை ஏற்றுமதி செய்வதில் முறைகேடு நடந்துள்ளதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

பல மணி நேரமாக நீடித்த சோதனையில் ஒரே வீட்டில் இருந்து 177 கோடி ரூபாய் கட்டுக்கட்டாக புத்தம் புது கரன்சி நோட்டுகள் கைப்பற்றபட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments