நாகப்பட்டினத்தில் பறிமுதல் வாகனங்களைத் திருடி விற்ற காவலர் "சஸ்பெண்ட்"

0 7900

நாகப்பட்டினத்தில் சாராய கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு இரு சக்கர வாகனங்களைத் திருடி விற்ற மற்றொரு போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, காடம்பாடி பழைய ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் திடீரென மாயமாகின. இது தொடர்பாக செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ராஜ் குமார் என்பவனை போலீசார் கைது செய்து விசாரித்த போது, ஆயுதப்படை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முருகன் என்ற காவலர், பைக்கைத் திருடி ராஜ் குமாருக்கு விற்றது தெரியவந்தது.

ராஜ் குமார் கைதானதும் தலைமறைவான காவலர் முருகன்னைத் தற்காலிகமாக  பணிபணிநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி ஜவஹர் உத்தரவிட்டார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments