மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய விவகாரம்-அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

0 2890

கோவை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய விவகாரத்தில் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளி கணினி ஆசிரியரான விஜய் ஆனந்த் பள்ளி மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தினரை கண்டித்து மாணவ மாணவிகள் பள்ளி முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் சமாதானம் செய்து பள்ளிக்குள் அனுப்பி வைத்தும் மாணவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இதன்காரணமாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதாவின் உத்தரவையடுத்து சம்பந்தப்பட்ட கணிணி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments