ஒமைக்ரான் அச்சுறுத்தல் - ஒடிசாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை

0 2392

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக ஒடிசாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில மாநில அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், தேவாலயத்தில் நடைபெறும் திருப்பலி நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் ஓட்டல்கள், கிளப்புகள், கூட்டரங்கம் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2ஆம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகளைத் தவிர்த்து பிற கொண்டாட்டங்களுக்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்படுவதாகவும், பேரணி, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் அனுமதியில்லை என்றும் ஒடிசா அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments