முகக்கவசம் அணியாமல் இருந்தவர்களை பேருந்திலிருந்து அதிரடியாக கீழே இறக்கிவிட்ட அதிகாரிகள்

0 3160

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திடீரென ஆய்வு மேற்கொண்ட நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பேருந்துக்குள் முகக்கவசம் அணியாமல் இருந்தவர்களை அதிரடியாக கீழே இறக்கிவிட்டனர்.

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சாலைகளில் வாகனங்களில் சென்றவர்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments