பிரதமர் மோடி அமைச்சரவையில் மகளிருக்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது - ஜே.பி.நட்டா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மகளிருக்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் பாஜக மகளிரணி மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவில் முதன்முறையாகப் பாதுகாப்பு அமைச்சர், கல்வியமைச்சர், வெளியுறவு அமைச்சர், நிதியமைச்சர் ஆகிய பதவிகளில் பெண்களை நியமித்தது பிரதமர் மோடி ஆட்சியில்தான் எனத் தெரிவித்தார்.
இன்று மத்திய அமைச்சரவையில் 12 பெண்கள் அமைச்சர்களாக உள்ளதாகவும் பெருமிதத்துடன் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
Comments