10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமூக அறிவியல் ஆசிரியர் கைது.. கணித ஆசிரியருக்கு போலீசார் வலைவீச்சு

0 2685

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக அறிவியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதான நிலையில், மற்றொரு கணித ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ராமராஜும், கணித ஆசிரியராக பணியாற்றி வந்த ஆல்பர்ட் வளவன் பாபு என்பவனும் வகுப்பறையில் பாலியல் நோக்கத்தோடு இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அத்தோடு, மாணவிகளுக்கு செல்போன் மூலமாகவும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் நடந்த பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் ஆசிரியர்களின் பாலியல் தொல்லை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனையடுத்து, புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் நேரில் சென்று விசாரித்த போது சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் ஆசிரியர்கள் இருவரும் அத்துமீறியது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments