வங்கதேசத்தில் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 32 பேர் பலி

0 3225

வங்கதேசத்தில், கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 32 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தலைநகர் டாக்காவில் இருந்து 250கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜகாகாதியில் மூன்றடுக்கு கொண்ட கப்பல் ஒன்று சுமார் 500 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆற்றில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, எஞ்சினில் பற்றிய தீ, காற்றின் வேகத்தில் கப்பல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், தீயில் கருகியும், நீரில் மூழ்கியும் 32 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

வங்கதேசத்தில் அண்மைக் காலங்களில் கப்பல், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தீ விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு மோசமான பராமரிப்பும், கப்பல் கட்டும் தளங்களில் போதுமான பாதுகாப்பு வழிமுறைகள் கையாளப்படாததுமே காரணம் என வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments