அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு 4 பேர் காயம்

0 2147

அமெரிக்காவின் சிகாகோ புறநகரில் வணிக வளாகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி, அங்கு ஏராளமானோர் குவிந்திருந்த நிலையில் நான்கைந்து முறை துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு, அவர்கள் அலறியடித்து ஓடினர். பலர் கடைகளுக்குள் நுழைந்து பூட்டிக் கொண்டனர்.

இந்நிலையில் விரைந்து வந்த போலீசார், அங்கிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, காயமடைந்தவர்களில் இருவர் தான் குற்றவாளிகள் என சந்தேதிக்கப்படுகிறது.

அவர்கள் பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டபோது, மேலும் இருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நேரத்தில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் சிகாகோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments