பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை காண அரசு அதிகாரிகளை அனுப்பப்போவதில்லை - ஜப்பான்

0 2074

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை காண அரசு அதிகாரிகளை அனுப்பப்போவதில்லை என ஜப்பான் அறிவித்துள்ளது.

போட்டியை காண ஜப்பான் சார்பாக டோக்கியோ ஒலிம்பிக் 2020 தலைவர் மற்றும் ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஆகிய இருவர் மட்டுமே  போட்டிகளில் கலந்து கொள்ளவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உய்குர் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ராஜாங்கஅளவில் பீஜிங் குளிர்கால ஒலும்பிக் போட்டியை புறக்கணித்துள்ள நிலையில், அந்நாடுகளைச் சேர்ந்த  வீரர்கள் போட்டியில் கலந்துக் கொள்ள இதுவரை தடை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments