இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திருப்பதியில் சுவாமி தரிசனம்

0 2247

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக் ஷே தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தனி விமானம் மூலம் குடும்பத்துடன் ஆந்திரா வந்திருந்த மகிந்த ராஜபக்சேவுக்கு நேற்று ரேணிகுண்டா விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த ராஜபக்சேவுக்கு, கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். இன்று மாலை வரை திருமலையில் தங்கியிருக்கும் அவர் ஐந்து மணிக்குமேல் இலங்கை புறப்பட்டு செல்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments