அமெரிக்காவில் பனி உறைந்த சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி தீ விபத்து

0 2619

அமெரிக்காவில் பனி உறைந்த சாலையில் சறுக்கி நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின.

விஸ்கான்சின் நகர நெடுஞ்சாலையில் உறைந்து கிடந்த பனியில் சென்ற கார்கள், கண்டெய்னர் லாரிகள் சரிவர பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடி ஒன்றன் பின் ஒன்றாக மோதி தீ விபத்து ஏற்பட்டது.

அருகில் இருந்த வாகனங்களில் மளமளவென தீ பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. பற்றி எரிந்த தீயை அணைத்து விபத்துக்குள்ளான கார்கள் உள்ளிட்ட வாகனங்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments